Sunday, July 23, 2017

இனிப்பா? உப்பா?

இனிப்பா? உப்பா?
ஒரு பக்கம் உப்பு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருந்தது. மறுபக்கம் சக்கரை மூட்டைகள் இரண்டும் ஈரக்கசிவோடு இருந்தன.
பெரியநாயகம் தலையில் வைத்துக் கொண்டு கவலையோடு இருந்தார். காரணமா ஈரக்கசிவான மூட்டைகளை எப்படி விற்பதென்றுதான். இதைப்பார்த்த அவர் நண்பர் ராமலிங்கம். என்ன பெரியநாயகம்! ஏன் கவலையாயிருக்கே என்ன சமாசரம் என வினவினார். பெரியநாயகம் வஷயத்தைக் கூறியதும் இதுக்கா கவலைப் படறே. ரேஷன் கடைகள் எதுக்கு இருக்கு அங்க தள்ளி விடு. போ, வேலையைப் பாரு என்றான் ராமலிங்கம்.
இவர்கள் பேச்சைக் கேட்டதும் சர்க்கரையும், உப்பும் இப்படி மறியாதை இல்லாமல் பேசுகிறார்களே? அப்படியா நாம் மக்களுக்கு பயணற்று போவோம்! என்று வருந்தி தங்களை உற்பத்தி செய்யும் கரும்பினிடமும், கடலிடத்திலும் முறையிட்டன.

ஆசையும் பேராசையும்

ஆசையும் பேராசையும்
ஒரு அறிஞரிடம் ஒருவர் ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வேறுபாடு? என்று கேட்டார். ஆசை என்றால் என்ன? பேராசை என்றால் என்ன? என்று கேட்டார்.அதற்கு அந்த ஞானி ஒரு கதை கூறினார். ஒரு பணக்காரர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதை தங்கள் வீட்டுக் காம்பவுண்டுக்குள்ளேயே சுற்றிவரும்படி வாயிற் கதவை அடைத்தே வைத்திருந்தார். ஆனாலும் அந்த நாய் கதவில் தெரிந்த இடுக்கின் வழியே வெளியே உலவும் தெரு நாயுடன் பேசிக் கொள்ளும்.

Saturday, July 22, 2017

அறிவுத்திறனும், உடல் பலமும்

அறிவுத்திறனும், உடல் பலமும்
ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை.

அறிவாளியும் முட்டளாவான்

அறிவாளியும் முட்டளாவான்
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம் என்றார். சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா? என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார். முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான் என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள் ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்கஒருத்தர் சொன்னாரு, என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்னு. மறுத்த அடுத்தவர், வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்கன்னாரு.

Friday, July 21, 2017

புத்தியை தீட்டு

புத்தியை தீட்டு
ஒரு காட்டிற்கு இரண்டு மரவெட்டிகள் சென்றார்கள், மாலை மீண்டும் இருவரும் கூடும் போது ஒருவரிடம் அதிக விறகும் மேலும் அவர் அதிக களைப்படையாமலும் இருந்தார், மற்றொருவருக்கோ பயங்கர ஆச்சர்யம். நம்மை போல தானே அவனும், அவனால் மட்டும் இப்படி இது சாத்தியமானது என்று. ஆர்வம் தாங்காமல் அவனிடமே கேட்டு விட்டான்! நண்பன் அவனிடம் கேட்டான், இந்த விறகுகளுக்காக நீ என்ன செய்தாய் என்று! அவன் சொன்னான், இடைவிடாமல் வெட்டி கொண்டே இருந்தேன் என்று,.....

மனம் தளராத எறும்பு

மனம் தளராத எறும்பு
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்....

வாக்கு மாறாத பசு உயிரை மாய்த்துக்கொண்ட புலி

வாக்கு மாறாத பசு உயிரை மாய்த்துக்கொண்ட புலி
காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன. அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ஓட்டம் எடுத்தன. ஆனால் புண்யகோடி என்ற பசு மட்டும் அந்த புலியிடம் மாட்டிக் கொண்டது. அந்தப் பசியுடம் புண்யகோடியைக் கொன்று தின்னப் புறப்பட்ட புலியிடம் புண்யகோடி மிகுந்த துக்கத்துடன் வேண்டிக் கொண்டது.